சென்னை பூக்கடை அருகே சாலையோரம் தூங்கிய முதியவர் லாரி ஏறி இறங்கியதில் பலி

பலியானவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது.கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த முருகேசனை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
சென்னை பூக்கடை அருகே சாலையோரம் தூங்கிய முதியவர் லாரி ஏறி இறங்கியதில் பலி
Published on

ராயபுரம்:

பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65) முதியவர். இவர் சென்னை பூக்கடையில் உள்ள நடைபாதையில் தங்கி செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.

நேற்று இரவு வேலை முடிந்ததும் சுப்பிரமணி சாலை ஓரத்தில் படுத்து தூங்கினார். அப்போது அந்த வழியாக வந்த லாரி திடீரென சாலையோரம் தூங்கிய சுப்பிரமணியன் மீது ஏறி இறங்கியது. இதில் தலை மற்றும் முகம் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

இதுகுறித்து பூக்கடை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியானவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது.

இது குறித்து யானை கவுனி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரான கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த முருகேசனை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com