விழுப்புரம் அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவர் பஸ் மோதி பலி

சரோஜாவிற்கு வயது முதிர்வின் காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதுசென்னை நோக்கி சென்ற அரசு பஸ் இவர் மீது மோதியது.
விழுப்புரம் அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவர் பஸ் மோதி பலி
Published on

விழுப்புரம்:

விக்கிரவாண்டி அருகே தென்பேர் புதுப்பாளையம் விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 68) இவரது மனைவி சரோஜா (60) மகன் முருகவேல் (40) இவர் அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தர்மலிங்கம் மனைவி சரோஜாவுடன் விழுப்புரம் ஸ்ரீராம் நகரில் உள்ள மகன் முருகவேல் வீட்டில் வசித்து வந்தனர். 

இதனை அடுத்து சரோஜாவிற்கு வயது முதிர்வின் காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சரோஜாவை சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்நிலையில் தர்மலிங்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சரோஜாவை பார்க்க தனது மகன் வீட்டிலிருந்து பஸ்சில் முண்டியம்பாக்கம் சென்றார். அப்போது தர்மலிங்கம் முண்டியம்பாக்கம் வந்துவிட்டதாக நினைத்து சிந்தாமணி என்ற பகுதியில் பஸ்சிலிருந்து இறங்கினார். அதன் பின்னர் முண்டியம்பாக்கம் என நினைத்து சிந்தாமணியில் இறங்கியதை அறிந்த தர்மலிங்கம் முண்டியம்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிந்தாமணியில் இருந்து நடந்து சென்றார். சிந்தாமணி பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடந்தார். 

அப்போது விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் இவர் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தர்மலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com