உளுந்தூர்பேட்டை அருகே பெற்ற பிள்ளைகள் சரிவர கவனிக்காததால் முதியவர் தற்கொலை

உளுந்தூர்பேட்டை அருகே பெற்ற பிள்ளைகள் சரிவர கவனிக்காததால் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கலியனின் மனைவி இறந்தார்.
உளுந்தூர்பேட்டை அருகே பெற்ற பிள்ளைகள் சரிவர கவனிக்காததால் முதியவர் தற்கொலை
Published on

கள்ளக்குறிச்சி:

உளுந்தூர்பேட்டை தாலுக்கா ஈஸ்வரகண்ட நல்லூரை சேர்ந்தவர் கலி யன் (வயது 65). இவருக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமண மாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இவரது மனைவி இறந்தார். தனியாக வசித்து வந்த இவரை கவனிக்க யாரும் இல்லை, இவரது பிள்ளை களும் இவருக்கு உணவு வழங்குவது, மருந்து, மாத்திரைகள் வாங்கித் தருவது போன்றவைகளை சரிவர செய்யவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட மன உலைச்சலில் விரக்தி யடைந்த கலியன், வீட்டி லிருந்த எலிபேஸ்டை சாப்பிட்டார். இதில் மயங்கி விழுந்த கலியனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டும், கலியன் பரிதாப மாக உயிரிழந்தார். பெற்ற பிள்ளைகள் கவனிக்கா ததால் விரக்தியடைந்த முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களி டையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com