விக்கிரவாண்டியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தனியார் கம்பெனி ஊழியர் சாவு

விக்கிரவாண்டி வடக்கு புறவழிச் சாலை கடந்து வரும் பொழுது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திச் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.
விபத்தில் இறந்த மகேஸ்வரன்.
விபத்தில் இறந்த மகேஸ்வரன்.
Published on

விழுப்புரம்:

விக்கிரவாண்டி அருகே தென்மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரன்(வயது 39) இவர் புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் மோட்டார் சைக்கிள் மூலமாக திருபுவனக்கு சென்று திரும்பி வருவார் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் தென்பேரிலிருந்து புறப்பட்டு விக்கிரவாண்டி வடக்கு புறவழிச் சாலை கடந்து வரும் பொழுது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திச் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com