விபத்தில் காயம் அடைந்த முதியவர் பலி

எதிர்பாராத விதமாக நஞ்சப்பன் வந்த இருசக்கர வாகனம் மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் காயம் அடைந்த முதியவர் பலி
Published on

பு.புளியம்பட்டி:

புஞ்சைபுளியம்பட்டி அடுத்த காவலிபாளையம் அருகே அனைய பாலத்தை சேர்ந்தவர் நஞ்சப்பன் ( 60). இவர் தனது இருசக்கர வாகனத்தில் புளியம்பட்டி- சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் ஒரு தனியார் மில் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக எதிரில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக நஞ்சப்பன் வந்த இருசக்கர வாகனம் மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.

இதில் நஞ்சப்பன் தூக்கி வீசப்பட்டு தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அன்னூரில் உளள் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நஞ்சப்பன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com