கேலி செய்ததால் ஆத்திரம் முதியவரை கழுத்தறுத்து கொன்ற ஆட்டோ டிரைவர் கைது

தன்னை கேலி செய்ததாக நினைத்த வாலிபருக்கும் முதியவருக்கும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது தகராறாக மாறியது. ஆத்திரமடைந்த வாலிபர் முதியவரின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் உப்புக்கோட்டை அருகே கூழையனூரை சேர்ந்தவர் தவசி(56). அதேபகுதியை சேர்ந்தவர் பிரபு(26). இவர்கள் 2 பேரும் தேனி-குச்சனூர் சாலையில் உள்ள பஸ்நிறுத்தத்தில் நின்று பேசி கொண்டிருந்தனர்.

அப்போது தவசி பிரபுவை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது தகராறாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த பிரபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தவசியின் கழுத்தை அறுத்தார். ஆத்திரம் தீரும் வரை அவரை அறுத்ததால் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதை பார்த்ததும் பிரபு அங்கிருந்து தப்பிச்சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வீரபாண்டி போலீசார் விரைந்து வந்து தவசியின் உடலை கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பிரபு போலீசில் சரணடைந்தார். தன்னை தவசி கேலி செய்ததால் கொலை செய்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com