சின்னமனூர் அருகே முன் விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல்

சம்பவத்தன்று பாண்டியை 3 பேரும் சேர்ந்து கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

சின்னமனூர்:

சின்னமனூர் அருகே சீலையம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. (வயது 39). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன், முத்தையா, காட்டுராஜா ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று பாண்டியை 3 பேரும் சேர்ந்து கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து சின்னமனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். காயமடைந்த பாண்டி சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

உத்தமபாளையத்தை சேர்ந்தவர் உதயராணி (50). இவருக்கும் கொடுவிலார் பட்டியை சேர்ந்த தனலெட்சுமி, கலைச்செல்வி ஆகியோருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் முன் விரோதம் இருந்துள்ளது. அவர் வீரபாண்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற போது தனலெட்சுமி, கலைச்செல்வி ஆகியோர் அவரை தகாத வார்த்தை களால் திட்டி தாக்கியுள்ள னர். காயமடைந்த உதய ராணி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து வீரபாண்டி போலீ சில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com