திண்டிவனம் அருகே அம்மன் கோவில் உண்டியல் பணம் கொள்ளை

திண்டிவனம் அருகே அம்மன் கோவில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.உண்டியலை உடைத்து திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.
திண்டிவனம் அருகே அம்மன் கோவில் உண்டியல் பணம் கொள்ளை
Published on

விழுப்புரம்:

திண்டிவனம் அருகே மயிலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கர்ணாவூர் பகுதியில் பஞ்சனி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சம்பவத்தன்று மர்ம நபர்கள்கோவில் கேட்டில் இருந்த பூட்டை உடைத்தனர். பின்னர் உள்ளே இருந்த 2 உண்டியல்களை மர்ம நபர்கள் உடைத்து, அதிலிருந்த பணம் மற்றும் காணிக்கை பொருட்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து உண்டியலை உடைத்து திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com