நகராட்சி, பேரூராட்சிகளை தரம் உயர்த்த சட்ட திருத்தம்: சட்டசபையில் நாளை மறுநாள் கொண்டு வரப்படுகிறது

பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை.சட்ட திருத்தம் நாளை மறுதினம் பேரவையில் கொண்டு வரப்பட உள்ளது.
நகராட்சி, பேரூராட்சிகளை தரம் உயர்த்த சட்ட திருத்தம்: சட்டசபையில் நாளை மறுநாள் கொண்டு வரப்படுகிறது
Published on

சென்னை:

சட்ட சபையில் கேள்வி நேரத்தில், தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், தேன்கனிக்கோட்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அதிக மக்கள் தொகை கொண்ட பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், தமிழகத்தில் புதிய நகராட்சி, பேரூராட்சிகளை மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் தரம் உயர்த்துவது குறித்த சட்ட திருத்தம் நாளை மறுதினம் பேரவையில் கொண்டு வரப்பட உள்ளதாகவும் கூறினார்.

மேலும், அதன் மூலம் சில பகுதிகளில் மக்கள் தொகை மற்றும் வருவாய் குறைவாக இருந்தாலும் தேவை ஏற்பட்டால் அவற்றை நகராட்சியாகவோ மாநகராட்சியாகவோ தரம் உயர்த்தலாம் என சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com