அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட அனைத்து துறை முகாம்

ஊராட்சி துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பு முகாம் செல்லபிள்ளைகுட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த முகாமில் வருவாய்துறை, ஊரக வளர்ச்சித்துறை உட்பட அனைத்து அரசு துறைகளை சேர்ந்த அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
முகாமில் கலந்து கொண்டவர்கள்.
முகாமில் கலந்து கொண்டவர்கள்.
Published on

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பு முகாம் செல்லபிள்ளைகுட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் வரவேற்றார்.

ஒன்றிய ஆணையர் சுந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், முன்னிலையில் நடைபெற்ற முகாமில் மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் மற்றும் கூடுதல் துணை ஆட்சியர் கீதாபிரியா தலைமை வகித்து, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகளை செயல்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

இந்த முகாமில் வருவாய்துறை, ஊரக வளர்ச்சித்துறை உட்பட அனைத்து அரசு துறைகளை சேர்ந்த அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com