அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகிலஇந்திய விவசாயதொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் அம்மையப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி வேலை நாட்களை உயர்த்தி 150 நாட்களாக அறிவிக்க வேண்டும்.

தினக்கூலி ரூ.381 ஆக உயர்த்த வேண்டும். தாலிக்கு தங்கம் வழங்கும் திருமணஉதவி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com