குமுளி அருகே சாராயம் காய்ச்சியவர் கைது; 30 லிட்டர் பறிமுதல்

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இளைஞர்களை குறி வைத்து கள்ளச்சாராயம் விற்கும் கும்பல் உலவி வருகிறது. சாராயம் காய்ச்சியவரை போலீசார் கைது செய்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கூடலூர்:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டா ட்டத்தை யொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வரத்ெதாடங்கி உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இளைஞர்களை குறி வைத்து கள்ளச்சாராயம் விற்கும் கும்பல் உலவி வருகிறது.

அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கலால்துறை துணை ஆணையர் அபுஆபிரகாம் மாவட்டத்தில் சோதனை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் வண்டிப்பெ ரியாறு கலால்துறை இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.

குமுளி அருகே அமராவதி பகுதியில் அச்சன்குஞ்சு (வயது 48) என்பவர் வீட்டில் சாராயம் காய்ச்சுவது கண்டு பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com