கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு வேளாண் காடுகள் வளர்ப்பு பயிற்சி

விவசாயிகளுக்கு வேளாண்மை-உழவர் நலத்துறையின் அட்மா திட்டத்தின் கீழ் குப்பிரிக்காபாளையம் கிராமத்தில் நடைபெற்றது. அரசின் மானிய உதவிகள், மரக்கன்றுகளை பராமரிப்பது, மர வளர்ப்புக்கு உதவிடும் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துக்கூறினார்.
கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு வேளாண் காடுகள் வளர்ப்பு பயிற்சி
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு வேளாண் காடுகள் வளர்ப்பு குறித்த பயிற்சி வேளாண்மை-உழவர் நலத்துறையின் அட்மா திட்டத்தின் கீழ் குப்பிரிக்காபாளையம் கிராமத்தில் நடைபெற்றது. பயிற்சியை வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தொடங்கி வைத்து வட்டார வேளாண்மை மானிய திட்டங்கள், உழவன் செயலியை விவசாயிகள் பதிவிறக்கம் செய்வது, பயிர் சாகுபடி தொடர்பான தொழில்நுட்ப தகவல்கள் குறித்து விளக்கினார்.

வேளாண்மை அலுவலர் அன்புசெல்வி சொட்டுநீர் பாசன திட்டங்களின் பயன்கள் மற்றும் மானிய விபரங்கள் குறித்து எடுத்துக்கூறினார். சொட்டுநீர் உழவியல் நிபுணர் கிருஷ்ணா வேளாண் காடுகள் வளர்ப்பு குறித்தும், அதன் தேவையையும், அதற்கான அரசின் மானிய உதவிகள், மரக்கன்றுகளை பராமரிப்பது, மர வளர்ப்புக்கு உதவிடும் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துக்கூறினார்.

பயிற்சியில் உழவன் செயலியை இதுவரை பதிவிறக்கம் செய்து பயன்ப டுத்தாத விவசாயிகளுக்கு பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது குறித்து நேரடி செயல்விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது. முடிவில் வேளாண்மை உதவி அலுவலர் சந்திர சேகரன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் கோகுல் மற்றும் அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜோதிமணி ஆகியோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com