சங்ககிரியில் விவசாயம் செழிக்க வேண்டி கஞ்சி கலய ஆன்மீக ஊர்வலம்

சங்ககிரி வழிபாட்டு மன்றத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில், ஏராளமான பெண்கள் கஞ்சி கலயத்தை தலையில் சுமந்து வந்தனர்.பின்னர் கலயத்திலிருந்த கஞ்சியை பெரிய பாத்திரத்தில் ஊற்றி, மக்களுக்கு வழங்கினர்.
கஞ்சி கலய ஊர்வலம் சென்ற பெண்கள்.
கஞ்சி கலய ஊர்வலம் சென்ற பெண்கள்.
Published on

சங்ககிரி:

சங்ககிரி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில், உலக அமைதி, மழைவளம், விவசாயம் செழிப்படைய, ஆடிப்பூர கஞ்சி கலய ஆன்மிக ஊர்வலம் நடந்தது. சங்ககிரி வழிபாட்டு மன்றத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில், ஏராளமான பெண்கள் கஞ்சி கலயத்தை தலையில் சுமந்து வந்தனர்.

ஊர்வலம் சங்ககிரி மலையடிவாரம் ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் இருந்து, சந்தைப்பேட்டை, புதிய எடப்பாடி சாலை வழியாக, ஊர்வலம் சென்று, பவானி சாலையில் உள்ள கோவிலை அடைந்தது. இதில், விழாப்பொறுப்பாளர் ராமசாமி உட்பட, 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, சாமிக்கு பால் அபிஷேகம் செய்து வழிப்பட்டனர்.

பின்னர் கலயத்திலிருந்த கஞ்சியை பெரிய பாத்திரத்தில் ஊற்றி, மக்களுக்கு வழங்கினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com