search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணிகள் முடிந்த பின் குடும்பத்தின் மகிழ்ச்சியில் அக்கறை காட்ட வேண்டும்- போலீசாருக்கு, டி.ஜி.பி. அறிவுரை
    X

    கூட்டத்தில் தமிழக டி.ஜி.பி சங்கர்ஜிவால் பேசினார்.

    பணிகள் முடிந்த பின் குடும்பத்தின் மகிழ்ச்சியில் அக்கறை காட்ட வேண்டும்- போலீசாருக்கு, டி.ஜி.பி. அறிவுரை

    • போலீசார்களுக்கு கடமைகள் எந்த அளவு முக்கியமோ, அதேபோல குடும்பமும் முக்கியம்.
    • உங்களுடைய மன அழுத்தத்தைக் குறைக்க செய்யும்.

    தஞ்சாவூர்:

    தமிழக டி.ஜி.பி.யாக பொறுப்பேற்ற சங்கா்ஜிவால் முதல் முறையாக தஞ்சாவூருக்கு வந்தாா். பின்னா், தஞ்சாவூா் சரகத்துக்குள்பட்ட மாவட்டக் போலீஸ் சூப்பிரண்டுகள், துணைக் போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோருடன் ஆலோ சனை நடத்தினார் .

    அப்போது அவா் பேசியதாவது:

    தஞ்சாவூா் சரகத்து க்குள்பட்ட போலீ ஸார்களுக்கு கடமை கள் எந்த அளவு முக்கியமோ, அதேபோல அவா்களுடைய குடும்பமும் முக்கியம். இதை கருத்தில் கொண்டு, ஒவ்வொருவரும் பணிகள் முடிந்த பிறகு குடும்பத்தின் மகிழ்ச்சியிலும் அக்கறை காட்ட வேண்டும்.

    அது உங்களுடைய மன அழுத்தத்தைக் குறைக்கச் செய்யும்.

    போலீசார்கள் தங்களு டைய குறைகளை துறை ரீதியாக தொடா்புடை யது என்றால், தயங்காமல் என்னிடம் தெரியப்ப டுத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் மத்திய மண்டல ஐ.ஜி.காா்த்திகேயன், தஞ்சாவூா் சரகக் டி.ஐ.ஜி.ஜெயச்சந்திரன், மாவட்டக் போலீஸ் சூப்பிரண்டுகள் ஆஷிஷ் ராவத் (தஞ்சாவூா்), சுரேஷ்குமாா் (திருவாரூா்), ஹா்ஷ்சிங் (நாகை), நிஷா (மயிலாடுதுறை) மற்றும் துணைக் போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×