இந்திய ஜனநாயக கட்சியில் இணைந்த இளைஞர்கள்- மாற்றுக்கட்சியினர்

புதிய உறுப்பினர்களை சேர்ப்பது மற்றும் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.செயலாளர் முருகன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் கிருபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்திய ஜனநாயக கட்சியில் இணைந்தவர்களை  ஜி.என்.ஆர். பாரிகணபதி சால்வை அணிவித்து வரவேற்ற காட்சி. 
இந்திய ஜனநாயக கட்சியில் இணைந்தவர்களை ஜி.என்.ஆர். பாரிகணபதி சால்வை அணிவித்து வரவேற்ற காட்சி. 
Published on

திருப்பூர் :

இந்திய ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் பி.என்.ஆர். பாரி கணபதி தலைமையில் நிர்வாகிகள் திருப்பூர் மாவட்டம் முழுவதும் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது மற்றும் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

 அதன்படி திருப்பூர் அவினாசி ரோடு சாமுண்டிபுரம் பகுதியில் இருந்து அ.தி.மு.க., மற்றும் மாற்று அமைப்புகளை சார்ந்த முருகன், ராஜபாண்டி, ரஞ்சித், பாலசுப்ரமணியம், பரமேஸ்வரி மற்றும் சுமார் 50பேர் மாவட்ட செயலாளர் சோனைமுத்து தலைமையில் மாற்று கட்சியில் இருந்து விலகி , மாநில நிர்வாக குழு உறுப்பினர் பிஎன்ஆர்.பாரிகணபதி முன்னிலையில் தங்களை இந்திய ஜனநாயக கட்சியில் இணைத்துக்கொண்டனர். 

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சக்திவேல், மாவட்ட துணை தலைவர் முருகேசன் ,மாவட்ட துணைச் செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முருகன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் கிருபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com