ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தொழில் திறன் மேம்பாட்டு வழிகாட்டி குறித்து ஆலோசனை

பொதுச் செயலாளர் வினோத் தலைமையில் இளைஞர்களுக்கு தொழில் திறன் வழிகாட்டி பயிலரங்கு நடைபெற்றது.முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தொழில் திறன் மேம்பாட்டு வழிகாட்டி குறித்து ஆலோசனை
Published on

பொன்னேரி:

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் பொதுச் செயலாளர் வினோத் தலைமையில் இளைஞர்களுக்கு தொழில் திறன் வழிகாட்டி பயிலரங்கு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் மாணவர்கள் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஆலோசனைகளை சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் கந்தசாமி கலந்துகொண்டு கல்வி வேலை வாய்ப்பு தொழில் வழிகாட்டி குறித்து ஆலோசனை வழங்கினார்.

முகாமில் தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மையம் முதுநிலை மேலாளர் ஆனந்த நாராயண பிரசாத் சென்னை மாவட்ட தொழில் முனைவோர் பயிற்சியாளர் சசிகுமார் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் இளஞ்செழியன் வழக்கறிஞர் தேவராஜ், ஒன்றிய செயலாளர் யாபேஸ், ஒன்றிய கவுன்சிலர் மெய்யழகன், வெற்றிச்செல்வன் உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com