ஊட்டியில் அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்

அ.தி.மு.க 52-வது ஆண்டு தொடக்க விழா எம்.ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
ஊட்டியில் அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்
Published on

ஊட்டி,

ஊட்டி ஏ.டி.சி சதுக்கத்தில் அ.தி.மு.க 52-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் நடந்தது.

அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் தேனாடுலட்சுமணன், மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அ.தி.மு.க தலைமை நிர்வாகி எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்துக்கொண்டு பேசினார். தொடர்ந்து ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர் அக்கிம்பாபு, எப்பநாடு கண்ணன் மீனவர் அணி மாவட்ட. செயலாளர் விசாந்த்,ஒன்றிய செயலாளர் கடநாடு ப.குமார், பேரூராட்சி செயலாளர்கள் கண்ணபிரான், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கோத்தகிரி வடிவேல், நகர்மன்ற உறுப்பினர்கள் லயோலா குமார், அன்புச்செல்வன், சகுந்தலா, தனலட்சுமி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் முன்னதாக எம்.ஜிஆர் படத்திற்கு அ.தி.மு.க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com