சங்கரன்கோவிலில் வ.உ.சி. படத்திற்கு அ.தி.மு.க.வினர் மரியாதை-முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி பங்கேற்பு

முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி விழாவில் கலந்து கொண்டு வ.உ.சி.யின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவின் போது பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
சங்கரன்கோவிலில் வ.உ.சி. படத்திற்கு அ.தி.மு.க.வினர் மரியாதை-முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி பங்கேற்பு
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் உச்சினிமாகாளியம்மன் கோவில் தெருவில் அ.தி.மு.க. சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது. அ.தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர் அண்ணாமலை புஷ்பம் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி பொருளாளர் மாரியப்பன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாநில மகளிர் அணி துணை செயலாளருமான ராஜலெட்சுமி கலந்து கொண்டு வ.உ.சி.யின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

விழாவில் சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் ரமேஷ், நகர செயலாளர் ஆறுமுகம், நகர்மன்ற உறுப்பினர் சங்கரசுப்பிரமணியன், தலைமை நிலைய பேச்சாளர்கள் கணபதி, ராமசுப்பிரமணியன், நகர அவை தலைவர் வேலுச்சாமி, பொருளாளர் அய்யப்பன், நகர பேரவை செயலாளர் சவுந்தர் என்ற சாகுல் ஹமீது, எழில்நகர் கிளை செயலாளர் பாபு, களப்பாகுளம் கிளை செயலாளர் பசும்பொன், தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் முருகன், செந்தில்குமார், குட்டி மாரியப்பன், சிவஞான ராஜா உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு வ.உ.சி. படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com