மாநகராட்சி-நகராட்சிகளில் சொத்து வரி, மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் சொத்துவரி, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.களக்காடு நகராட்சி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
களக்காட்டில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்தபடம்.
களக்காட்டில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்தபடம்.
Published on

நெல்லை:

தமிழகத்தில் சொத்துவரி, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி, நகராட்சிகளில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

களக்காடு

களக்காடு நகராட்சி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில் அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் நாராயணபெருமாள், எம்.ஜி.ஆர்.மன்ற இளைஞரணி செயலாளர் பால்துரை, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் செல்வகுமார், மீனவரணி செயலாளர் அகிலன், விவசாய அணி தலைவர் லாசர், நகர செயலாளர் செல்வராஜ் சுவாமிதாஸ், ஒன்றிய செயலாளர்கள் வேலுச்சாமி, ஜெயராமன், சங்கரலிங்கம், விஜயகுமார், பேரூர் செயலாளர்கள் முருகன், பாபு, விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வண்ணார்பேட்டை

நெல்லை வண்ணார் பேட்டையில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணைசெயலாளர் கல்லூர் வேலாயுதம், பேரவை செயலாளர் ஜெரால்டு, பகுதி செயலாளர்கள் ஜெனி, திருத்து சின்னத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மாநகர பகுதியில் தச்சநல்லூரில் டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால்கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் முன்னாள் துணைமேயர் ஜெகநாதன் என்ற கணேசன், அைவத்தலைவர் பரணிசங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி.ஆதித்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டவுனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன் சிறப்புரை யாற்றினார். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில் ஆறுமுகம், பகுதி செய லாளர்கள் காந்தி வெங்கடாசலம், மோகன், ஒன்றிய செயலாளர் லெட்சுமண பெருமாள், கவுன்சிலர் சந்திரசேகர், வக்கீல் அன்பு அங்கப்பன், நிர்வாகிகள் சீனிமுகம்மது சேட், பாறையடி மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டி யன், மருதூர் ராம சுப்பிர மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அம்பை

அம்பை நகராட்சியில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பு செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். இதில் நகர செயலாளர்கள் அறிவழகன், கண்ணன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவன்பாபு, தலைமை கழக பேச்சாளர் மின்னல் மீனாட்சி, கவுன்சிலர்கள் மாரிமுத்து, சிவக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் பார்வதி பாக்கியம், எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் முத்தையா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com