தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஆழ்வார்திருநகரியில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.நிகழ்ச்சியில் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் இனிப்பு வழங்கிய காட்சி. அருகில் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்நாராயணன், நகர செயலாளர் ஆறுமுக நயினார் உள்ளனர்.
ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் இனிப்பு வழங்கிய காட்சி. அருகில் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்நாராயணன், நகர செயலாளர் ஆறுமுக நயினார் உள்ளனர்.
Published on

தென்திருப்பேரை:

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதை யடுத்து தென்திருப்பேரை மற்றும் ஆழ்வார்திருநகரியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி யும் கொண்டாடினர்.

தென்திருப்பேரை

தென்திருப்பேரை மெயின் ரோடு கால்நடை மருத்துவ மனை அருகில் நகர செயலாளர் ஆறுமுகநயினார் தலைமையில் ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஆழ்வை மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன் முன்னிலையில் பட்டாசு வெடித்து லட்டு வழங்கி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் சடகோபன், வார்டு செயலாளர்கள் மாரியப்பன், பிரேம்ஆனந்த், சந்துரு, அருணாசலம், லட்சு மணன், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆழ்வார்திருநகரி பஜாரில் நகர அவைத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி முன்னிலையில் நகர செயலாளர் செந்தில் ராஜ குமார் தலைமையில் பட்டாசு வெடித்தும், லட்டு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் கே.டி.சி. பெரியசாமி, ஜெயலலிதா பேரவை செயலாளர் சிவ சுப்பிரமணியன், முன்னாள் யூனியன் கவுன்சிலர் நாகமணி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வேலுசாமி, நகர துணைச்செயலாளர் விஸ்வநாதன், இளைஞரணி செயலாளர் லட்சுமணன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மரிய அடைக்கலம், சிறுபான்மை பிரிவு செய லாளர் தம்புராஜ், விவசாய பிரிவு செயலாளர் ஆனந்த பூபதி, ஆனந்தவெங்கடாச்சாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆழ்வார்திருநகரியில் நகர செயலாளர் செந்தில் ராஜகுமார் தலைமையில் பட்டாசு வெடித்தும், லட்டு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com