திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 20,22-ந்தேதிகளில் நடந்தது. விண்ணப்பிக்காத மாணவர்கள் நாளை மறுநாளுக்குள் விண்ணப்பிக்கலாம்.
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இக்கல்லூரியில் சேர www.aditanarcollege.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 20 மற்றும் 22-ந்தேதிகளில் நடந்தது. இதில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர். இதில் இடம் கிடைக்காத மாணவர்கள் அனைவரும் வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கண்டிப்பாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இளம் அறிவியல் பாடப்பிரிவுகளான கணிதம், இயற்பியில், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல் போன்ற பிரிவுகளில் சில இடங்கள் உள்ளன. இளங்கலை பாடப்பிரிவுகளான ஆங்கிலம், பொருளியல், பி.காம். போன்றவற்றிலும் சில இடங்கள் உள்ளன. எனவே இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் நாளை மறுநாளுக்குள் (வியாழக்கிழமை) விண்ணப்பித்து, வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9.45 மணிக்கு நடைபெறும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சுயநிதி பிரிவுக்கு தனி விண்ணப்பமும், அரசு உதவிபெறும் பிரிவுக்கு தனி விண்ணப்பமும் மாணவர்கள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com