குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட 235 மனுக்கள் மீது நடவடிக்கை- கலெக்டர் தகவல்

குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.கலை திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயத்தை கலெக்டர் வழங்கினார்.
குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் சாருஸ்ரீயிடம், பொதுமக்கள் மனு அளித்தனர்.
குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் சாருஸ்ரீயிடம், பொதுமக்கள் மனு அளித்தனர்.
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பொது–மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 235 மனுக்களை அளித்தனர்.

இந்த மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்–திறனாளிகள் நலத்துறையின் சார்பில், கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.9050 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விடுதிகளில் தங்கி பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கிடையே நடைபெற்ற கலை திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழுடன் கூடிய கேடயத்தினையும் கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசந்தர், மாற்றுத்–திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com