கோவையில் பிரியாணி சமைத்த போது விபத்து- பெண் உடல் கருகினார்

கடந்த 25 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. நேற்று பக்ரீத் பண்டிகை யையொட்டி ஆயிஷாவின் வீட்டிற்கு அவரது 2 மகள்களும் வந்து இருந்தனர்.
கோவையில் பிரியாணி சமைத்த போது விபத்து- பெண் உடல் கருகினார்
Published on

கோவை:

கோவை போத்தனூர் அருகே உள்ள சர்தார் சாகிப் வீதியை சேர்ந்தவர் அப்துல் கரீம். இவரது மனைவி ஆயிஷா (வயது 45). இவர்களுக்கு கடந்த 25 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது.

நேற்று பக்ரீத் பண்டிகை யையொட்டி ஆயிஷாவின் வீட்டிற்கு அவரது 2 மகள்களும் வந்து இருந்தனர். இதனையொட்டி அவர் தனது மகள்களுக்கு கொடுப்பதற்காக கியாஸ் அடுப்பில் பிரியாணி சமைத்துக்கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. கண்இமைக்கும் நேரத்தில் ஆயிஷாவின் ஆடையில் தீ பிடித்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டனர். பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆயிஷாவை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com