குண்டல்பட்டியில் இன்று காலை விபத்து: கார்-லாரி மோதி 5 பேர் காயம்

முன்னால் சென்ற லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது.காரில் இருந்த கலைமணி, ஜெகதீசன், பூர்ணிமா, பிரசன்னா, சங்கீதபிரியா ஆகிய 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
விபத்தில் சிக்கிய கார்-லாரியை படத்தில் காணலாம்.
விபத்தில் சிக்கிய கார்-லாரியை படத்தில் காணலாம்.
Published on

தருமபுரி,

தருமபுரி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால். ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவரது மனைவி கலைமணி (வயது65). இவரது உறவினர்களான ஜெகதீசன், பூர்ணிமா, பிரசன்னா (12), சங்கீதபிரியா (16) உள்பட 8 பேர் திருப்பதிக்கு காரில் சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது இன்றுகாலை தருமபுரிைய அடுத்த குண்டல்பட்டி பகுதியில் வந்த போது முன்னால் சென்ற லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் காரில் இருந்த கலைமணி, ஜெகதீசன், பூர்ணிமா, பிரசன்னா, சங்கீதபிரியா ஆகிய 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி மதிகோன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

விபத்தில் படுகாயம் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் சிக்கிய கார்-லாரியை அப்புறப்படுத்தினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com