நெல்லையில் 2 இடங்களில் விபத்து: டீ மாஸ்டர்-வாலிபர் பலி

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள செங்குளத்தை சேர்ந்தவர் அகஸ்டின். இவர் நான்கு வழிச்சாலையில் பேரின்பபுரம் அருகே உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.வள்ளியூரை சேர்ந்தவர் ஜெகன். இவர் அப்பகுதியில் உள்ள தனது சகோதரரின் மொபைல் கடையில் வேலை பார்த்து வந்தார்.
நெல்லையில் 2 இடங்களில் விபத்து: டீ மாஸ்டர்-வாலிபர் பலி
Published on

வள்ளியூர்:

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள செங்குளத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் அகஸ்டின்(வயது 22). இவர் நான்கு வழிச்சாலையில் பேரின்பபுரம் அருகே உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு செங்குளம்-தமிழாக்குறிச்சி சாலையில் ேமாட்டார் சைக்கிளில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் அகஸ்டின் நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்டார்.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை, அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு நள்ளிரவில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வள்ளியூர்

வள்ளியூரை சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவரது மகன் ஜெகன்(வயது 32). இவர் அப்பகுதியில் உள்ள தனது சகோதரரின் மொபைல் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது வள்ளியூர் சந்தை எதிரே சென்றபோது எதிர்பாராதவிதமாக அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டார். இதுதொடர்பாக வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com