ஏ.சி. எந்திரம் வெடித்து வாலிபர் சாவு

தனியார் ஏ.சி. பழுது நீக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.திடீரென ஏ.சி. எந்திரம் வெடித்து 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
பலியான கணேஷ்
பலியான கணேஷ்
Published on

சுவாமிமலை:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாராசுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சேகலாவுதீன் (வயது 24) கணேஷ் (23). இவர்கள் 2 பேரும் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் ஏ.சி. பழுது நீக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் திருநாகேஸ்வரம் மேலமடவளாகம் பகுதியில் உள்ள ஒருவர் வீட்டில் ஏ.சி. எந்திரத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது திடீரென ஏ.சி. எந்திரம் வெடித்துள்ளது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருநீலக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com