திருக்காட்டுபள்ளி பகுதி கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு

கோவிலில் உள்ள அனைத்து சன்னதியிலும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சந்தனகாப்பு அலங்காரத்தில் சவுந்தரநாயகிஅம்பாள், அக்னீஸ்வரசாமி.
சந்தனகாப்பு அலங்காரத்தில் சவுந்தரநாயகிஅம்பாள், அக்னீஸ்வரசாமி.
Published on

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளி அக்னிஸ்வர சுவாமி கோவிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அக்னிஸ்வரசாமி, சவுந்தரநாயகி அம்பாள், விநாயகர் முருகன் மற்றும் துர்க்கை அம்மன் உள்ளிட்ட அனைத்து சன்னதியிலும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேப்போல் திருக்காட்டு ப்பள்ளி தண்டாயு தபாணி சுவாமி கோயிலில் தண்டாயுதபாணி சுவாமிக்கும், ஒன்பத்து வேலி வன்மீகராதர் சாமி கோயிலில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

வடக்கு பூதலூர் நாச்சியார் அம்மன் கோவிலில் நாச்சியார் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com