சின்னமனூரில் இளம்பெண்ணை கடத்திச் சென்ற வாலிபருக்கு வலை

இவர் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருடன் பழகி வந்துள்ளதாக தெரிகிறது. அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது அந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றது தெரிய வந்தது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

சின்னமனூர்:

சின்னமனூர் வ.உ.சி. நகர் 4-வது தெருவைச் சேர்ந்த பழனிச்சாமி மகள் பவதாரணி (வயது 21). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்ற வாலிபருடன் பழகி வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பவதாரணி வீட்டை விட்டு மாயமானார். அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது பவதாரணியை கிஷோர் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

இது குறித்து பழனிசாமி சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட இளம்பெண்ணையும், அவரை கடத்திச் சென்ற வாலிபரையும் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com