காந்திபுரத்தில் காசாளரிடம் பணம் பறித்த வாலிபர் கைது

காந்திபுரத்தில் ஒரு பேக்கரியில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். ரூ.8 ஆயிரம் பணம் கைப்பையை பறித்து தப்பினார்.
காந்திபுரத்தில் காசாளரிடம் பணம் பறித்த வாலிபர் கைது
Published on

கோவை,

திருச்சி மணப்பாறையை சேர்ந்தவர் பெரியசாமி(29). இவர் காந்திபுரத்தில் ஒரு பேக்கரியில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் காந்திபுரம் பஸ் நிலையத்தில் ஈரோடு செல்லஅரசு பஸ்சில் அமர்ந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் பெரியசாமியிடம் இருந்த ரூ.8 ஆயிரம் பணம் கைப்பையை பறித்து தப்பினார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெரியசாமி திருடன் திருடன் என சத்தம் போட்டார். இதனை கேட்டு அக்கம்பக்கத்தினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து காட்டூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த மாரிமுத்து (44) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டு முன்பு நின்று செல்போனில் பேசினார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் கிருஷ்ணனிடம் இருந்து ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்து விட்டு சென்றார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் வாலிபரை மடக்கி பிடித்து ராமநாதபுரம் போலீசில் ஒப்படைத்தனர் விசாரணையில் அவர் விருதுநகரை சேர்ந்த ராஜா என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com