வருசநாடு அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம்

சம்பவத்தன்று வருசநாட்டில் உள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றுவருவதாக வீட்டில் கூறிவிட்டு தனது மகளை அழைத்துச்சென்றார்.ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

வருசநாடு:

ஆண்டிபட்டி அருகே வருசநாடு உரக்குண்டான் பகுதியை சேர்ந்தவர் கவியரசன். இவரது மனைவி முத்துமாரி(25). இவர்களுக்கு மித்ரா என்ற 4 வயது குழந்தை உள்ளது. கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் முத்துமாரி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

சம்பவத்தன்று வருசநாட்டில் உள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றுவருவதாக வீட்டில் கூறிவிட்டு தனது மகளை அழைத்துச்சென்றார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துமாரியின் தந்தை அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் வருசநாடு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கைக்குழந்தையுடன் மாயமான முத்துமாரியை தேடி வருகின்றனர்.

சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியை சேர்ந்தவர் பவித்ரா(22). சம்பவத்தன்று சின்னமனூருக்கு வேலை தேடி செல்வதாக கூறிச்சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஓடைப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பவித்ராவை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com