ஓடும் பஸ்சில் 4 பவுன் நகை திருடிய இளம்பெண் கைது

கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருடியுள்ளார். புகார் பேரில் வடவள்ளி போலீஸார் ரேவதியை கைது செய்துள்ளனர்..
ஓடும் பஸ்சில் 4 பவுன் நகை திருடிய இளம்பெண் கைது
Published on

கோவை, 

கோவை வீரகேரளம் பொன்னுசாமி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி மலர்(48). இவர் சம்பவத்தன்று கோவை கடைவீதிக்கு வந்து பொருட்களை வாங்கி விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக வீரகேரளம் செல்லும் பஸ்சில் சென்றார். வீட்டிற்கு சென்று தனது பையை எடுத்து பார்த்தார். அப்போது, தங்க செயின் மாயமாகி இருந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் நகைைய திருடியது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிய கடலூர் நெல்லி குப்பத்தை சேர்ந்த ரேவதி(28) என்பவரை கைது ெசய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.மேலும் அவரிடமிருந்து 4 பவுன் செயினை மீட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com