கோவையில் வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம் பிடித்த இளம்பெண்

பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டில் இருந்து வெளியேறினார் பாதுகாப்பு கேட்டு நெகமம் போலீசில் தஞ்சம்
கோவையில் வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம் பிடித்த இளம்பெண்
Published on

கோவை,

கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள குருநெல்லிபாளையத்தை சேர்ந்தவர் அகிலாதேவி (வயது 19).

இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டிபாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் (29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

இந்த காதல் விவகாரம் அகிலாதேவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் தங்களது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி மணமகனை தேடி வந்தனர்.

இது குறித்து அகிலாதேவி தனது காதலனுக்கு தகவல் தெரிவித்தார். 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர்.

சம்பவத்தன்று அகிலா தேவி, கார்த்திகேயன் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் வேட்டைக்காரன்புதூரில் உள்ள கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து காதலர்கள் பாதுகாப்பு கேட்டு நெகமம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். நெகமம் போலீசார் காதலர்களின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com