நெல்லை அருகே இளம்பெண் படத்தை ஆபாசமாக சித்தரித்த வாலிபர் - போலீசார் தீவிர விசாரணை

நெல்லை அருகே உள்ள மானூரை சேர்ந்த 32 வயது இளம்பெண் ஒருவர் தனது செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் வழக்குப் பதிவு செய்து மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
நெல்லை அருகே இளம்பெண் படத்தை ஆபாசமாக சித்தரித்த வாலிபர் - போலீசார் தீவிர விசாரணை
Published on

நெல்லை:

நெல்லை அருகே உள்ள மானூரை சேர்ந்த 32 வயது இளம்பெண் ஒருவர் தனது செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது உருவப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து முகநூலில் பதிவிட்டிருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இதுதொடர்பாக மானூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் வழக்குப் பதிவு செய்து மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதை யறிந்த அந்த நபர் அந்த படத்தை முகநூலில் இருந்து அழித்துள்ளார். எனினும் போலீசார் அவர் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் அந்த இளம்பெண் படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டதும், பின்னர் அந்த படத்தை அழித்ததும் தெரியவந்தது.

அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com