காதலை இளம்பெண் ஏற்க மறுத்ததால் பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

காதலை இளம்பெண் ஏற்க மறுத்ததால் பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலை இளம்பெண் ஏற்க மறுத்ததால் பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
Published on

கடலூர்:

கடலூர் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 28). பட்டதாரி. இவர் ஒரு இளம் பெண்ணை கடந்த பல ஆண்டுகளாக ஒரு தலையாக காதலித்து வந்தார். இந்நிலையில் இவரது காதலை அந்த இளம் பெண்ணிடம் தெரிவித்துள்ளார். காதலை இளம்பெண் ஏற்கவில்லை. இதனால் பிரபாகரன் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.

சம்பவத்தன்று பிரபாகரன், சேடப்பாளையம் பகுதியில் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பிரபாகரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com