மின் கம்பத்தில் ஏறிய தொழிலாளியால் பரபரப்பு

இதையடுத்து அருகில் இருந்த சிலரும் கூச்சல் போட்டனர்.அந்த தொழிலாளி எதற்காக ஏறினார் என்று தெரியவில்லை.
மின் கம்பத்தில் ஏறி நிற்கும் தொழிலாளி.
மின் கம்பத்தில் ஏறி நிற்கும் தொழிலாளி.
Published on

மெலட்டூர்:

மெலட்டூர் பகுதியை சேர்ந்த 40 வயது மதிக்கதக்க கூலி தொழிலாளி ஒருவர் அரசு மருத்துவமனை அருகே உள்ள மின் டிரான்ஸ்பர்மரில் திடீரென கம்பத்தில் ஏறி மின் கம்பிகளை தொட முயற்சி செய்து கொண்டி ருந்தார்.

அந்த வழியாக வந்த நபர் ஒருவர் பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்து கீழே இறங்க சொல்லி சத்தம் போட்டுள்ளார்.

இதையடுத்து அருகில் இருந்த சிலரும் கூச்சல் போட்டனர்.

பின்னர் அந்த தொழிலாளி மின் கம்பத்தில் இருந்து பத்திரமாக கீழே இறங்கி அங்கிருந்து சென்றுவிட்டார்.

அமின் ஊழியர்கள் மட்டுமே கம்பத்தில் ஏற அனுமதி என்ற நிலையில் அந்த தொழிலாளி எதற்காக ஏறினார் என்று தெரிய வில்லை.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com