தருமபுரி அருகே அழுகிய நிலையில் கிடந்த பெண் பிணம்

அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் உடல் கிடந்தது கண்டு அதிர்ச்சி யடைந்தனர்.கொன்று விட்டார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
தருமபுரி அருகே அழுகிய நிலையில் கிடந்த பெண் பிணம்
Published on

தருமபுரி,

தருமபுரியை அடுத்துள்ள கோட்டப்பட்டி அருகே பொய்யப்பட்டி வனப்பகுதி உள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது.

அப்பகுதி வழியாக சென்ற வர்கள் வனப்பகுதிக்குள் சென்று பார்த்தபோது அங்கு அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் உடல் கிடந்தது கண்டு அதிர்ச்சி யடைந்தனர்.

இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து கிடந்த பெண்ணுக்கு சுமார் 35 வயது இருக்கும். அவரது உடல் கிடந்த இடத்தருகே துணிகள் கிடந்தன.

இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? இந்த காட்டு பகுதிக்கு எதற்காக வந்தார்? யாராவது அவரை கற்பழித்து கொன்று விட்டார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com