செஞ்சி அருகே திருவிழாவுக்கு சென்ற பெண் வாகனம் மோதி சாவு

திருவிழாவுக்காக வந்திருந்தவர் பஸ் நிறுத்தம் அருகே நின்றார். அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஜோதி பலத்த காயம் அடைந்தார். சிகிச்சை பெற்று வந்த ஜோதி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்
செஞ்சி அருகே  திருவிழாவுக்கு சென்ற பெண் வாகனம் மோதி  சாவு
Published on

விழுப்புரம்: 

புதுவை தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி ஜோதி (வயது 44). இவரது சொந்த ஊர் செஞ்சி அருகே மேல்சித்தாமூர் ஆகும். ஜோதி மேல்சித்தாமரில் நடைபெறும் திருவிழாவுக்காக வந்திருந்தவர் வல்லம் பஸ் நிறுத்தம் அருகே நின்றார்.

அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஜோதி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கும் பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜோதி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com