திசையன்விளை அருகே கார்கள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் போலீஸ் ஏட்டு காயம்

நாகர்கோவிலில் இருந்து உவரிக்கு ஒரு குடும்பத்தினர் இன்று காலை காரில் சென்று கொண்டிருந்தனர். செல்வக்கனி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கார்கள் மீது மோதியது.
திசையன்விளை அருகே கார்கள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் போலீஸ் ஏட்டு காயம்
Published on

திசையன்விளை:

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து உவரிக்கு ஒரு குடும்பத்தினர் இன்று காலை காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த கார் திசையன்விளை அருகே பெட்டைகுளம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது, ரட்சகர் நகரில் இருந்து ஒரு கார் மெயின்ரோட்டில் ஏறியது.

அப்போது அந்த 2 கார்களும் ஒன்றோடு ஒன்று மோதிய நிலையில், அந்த வழியாக உவரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் முதல்நிலை பெண் ஏட்டு செல்வக்கனி(வயது 33) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கார்கள் மீது மோதியது. இதில் செல்வக்கனி காயம் அடைந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com