சாலையின் தடுப்பு கட்டையில் இருசக்கர வாகனம் மோதி விபத்து-வாலிபர் பலி

எதிர்பாராதவிதாக இருசக்கர வாகனம் சாலையின் தடுப்புச்சுவரில் மோதியது. ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
சாலையின் தடுப்பு கட்டையில்  இருசக்கர வாகனம் மோதி விபத்து-வாலிபர் பலி
Published on

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-மரக்காணம் சாலையில் உள்ள காந்தி நகர் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் பிரபுகுமார். இவரது மகன் அபிஷேக் (வயது 30).  இவர் இன்று அதிகாலை திண்டிவனம்-புதுவை நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கீழ்கூத்த ப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதாக இருசக்கர வாகனம் சாலையின் தடுப்புச்சுவரில் மோதியது. 

இதில் அபிஷேக் தூக்கி வீசப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கிளியனூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அபிஷேக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com