நடந்து சென்றவரை மிரட்டிய வாலிபர் கைது

சுரேஷ் குமார் ரெயிலடியில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார்.சுரேஷ்குமார் பொதுமக்கள் உதவியுடன் வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
நடந்து சென்றவரை மிரட்டிய வாலிபர் கைது
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார் ( வயது 49). சம்பவத்தன்று இவர் ரெயிலடியில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது இவரை ஒரு வாலிபர் வழிமறித்து நிறுத்தி ரூ.500 பணத்தைப் பறித்து தப்பி ஓட முயன்றார்.

அதிர்ச்சி அடைந்த சுரேஷ்குமார் பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து மேற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பணம் பறித்தவர் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த காளிதாஸ் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து காளிதாசை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com