விருத்தாசலம் அருகே வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற வாலிபர் தூக்கில் பிணமாக மீட்பு

கோயம்புத்தூரில் உள்ள ஒரு கடையில் வெல்டிங் வேலை செய்து வந்தார். அந்த வழியாக சென்றவர்கள் பார்த்த அதிர்ச்சியடைந்தனர்.
சுகன்ராஜ்.
சுகன்ராஜ்.
Published on

கடலூர்:

விருத்தாசலம் அருகே விஜயமாநகரத்தை சேர்ந்த வர் வெங்கடேசன். இவரது மகன் சுகன்ராஜ் (வயது 23). இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு கடையில் வெல்டிங் வேலை செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று விஜயமாநகரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். இதனையடுத்து சுகன்ராஜ் விஜயமாநகரத்தில் இருந்து கோவைக்கு நேற்று இரவு சென்றார்.

இந்நிலையில் இன்று காலை விஜயமாநகரம் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள ஒரு மரத்தில் சுகன்ராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்த அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மங்கலம் பேட்டை போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுகன்ராசின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து சுகன்ராசை யாரேனும் கொலை செய்து தூக்கில் பிணமாக தொங்க விட்ட னரா? அல்லது வேறு யேதேனும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com