உடலில் வெந்நீர் கொட்டிய வாலிபர் பலி

கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
உடலில் வெந்நீர் கொட்டிய வாலிபர் பலி
Published on

கோவை,

நாகப்பட்டிணத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் ராஜ் பெரிய நாயகம் (வயது 21). இவர் கோவை தென்னம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெசின் ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தார்.மேலும் பகுதி நேரமாக பிளம்மிங் மற்றும் எலக்ட்ரிசீயன் வேலையும் செய்து வந்தார்.சம்பவத்தன்று இவர் சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு வாட்டர் ஹீட்டர் பொருத்துவதற்காக சென்றார். அப்போது திடீரென வெந்நீர் சென்ற குழாய் உடைந்து ராஜ் பெரிய நாயகத்தின் மீது வெந்நீர் கொட்டியது. இதில் அவரது முதுகு மார்பு போன்ற பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ராஜ் பெரிய நாயகம் பரிதாபமாக இறந்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com