கோத்தகிரி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோத்தகிரி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
Published on

கோத்தகிரி,

நீலகிரி மாவட்ட எஸ்பி பிரபாகர் உத்தரவின் படி கோத்தகிரியில் போதை பொருட்கள் ஒழிப்பு சோதனையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் ரகுமான் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குஞ்சப்பனை சோதனை சாவடி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் தவிட்டுமேட்டை சேர்ந்த பாலன்(23) என்பதும், கஞ்சா விற்க நின்றதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com