பொள்ளாச்சி அருகே பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர்

சில நாட்களாக மாணவியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படவே பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் முத்தமிழரசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர்
Published on

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. மாணவி அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். மாணவியின் மாமா வீடு நெகமம் அருகே உள்ள ஒருகிராமத்தில் உள்ளது.

இங்கு சிறுமி தனது தாயுடன், மாதத்தில் ஒருமுறை சென்று வருவது வழக்கம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கம் போல சிறுமி தனது தாயுடன், தனது மாமா வீட்டிற்கு சென்றார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த முத்தமிழரசன் (வயது21) என்ற வாலிபருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.

அடிக்கடி 2 பேரும் சந்தித்து கொண்டதால் பழக்கம் நட்பாக மாறியது. ஒருநாள் முத்தமிழரசன் சிறுமியை காதலிப்பதாக கூறினார். மாணவியும் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த முத்தமிழரசன் மாண வியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து விட்டார். இதே போன்று தொடர்ந்து அவர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த நிலையில் சில நாட்களாக மாணவியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படவே பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவியின் தாய் அவரை அருகே தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு மாணவி 5 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் அவர் அதிர்ச்சியானார். தொடர்ந்து தனது மகளிடம் விசாரித்தார்.

அப்போது மாணவி, தனக்கு நடந்தவற்றை தனது தாயாரிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மாணவியிடம் நேரில் சென்று விசாரித்தனர். விசாரணையில் முத்தமிழரசன், மாணவியை பலாத்காரம் செய்தது உறுதியானது.

இதையடுத்து போலீசார் முத்தமிழரசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com