பாலத்தின் அடியில் இறந்து கிடந்த வாலிபர்

பாலத்தின் அடியில் 35 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பாலத்தின் அடியில் இறந்து கிடந்த வாலிபர்
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஓசூர் சாலையில் கிருஸ்தவ ஆலயம் அருகில் உள்ள பாலத்தின் அடியில் 35 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com