கோவையில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபர்

ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபர்
Published on

கோவை,

கோவை - வடகோவை ரெயில் நிலையம் இடையே உள்ள தண்டவாள பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். இதில் அந்த வாலிபர் ரெயிலில் அடிபட்டு இறக்கவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசாருக்கு தகவல் தரப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் இறந்து கிடந்த வாலிபர் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை ரெயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்த வாலிபர் கொலை செய்யப்பட்டாரா அல்லது அவரை எவரேனும் கொன்று தண்டவாளத்தில் வீசி சென்றனரா? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.

இதுகுறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com