பசுமாட்டின் மீது மோட்டார் சைக்கிள் ேமாதி வாலிபர் பலி

பசுமாட்டின் கொம்பின் மீது போய் விழுந்தார். விபத்தில் சிக்கிய பசுமாடும் இறந்து போனது.
பசுமாட்டின் மீது மோட்டார் சைக்கிள் ேமாதி வாலிபர் பலி
Published on

கொழிஞ்சாம்பாறை,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் அருகே வசிப்பவர் கிரு ஷ்ணகுமார். இவரது மகன் கிருஷ்ணபி ரிஜித் (வயது23).

இன்று காலை 7 மணி அளவில் வாலிபர் தனது வீட்டிலிருந்து ஒற்றபாலம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது ரோட்டில் ஒரம் நின்றிருந்த பசுமாடு ஒன்று திடீரென சாலையின் குறுக்கே ஓடியது. அப்போது எதிர்பாராத விதமாக பசுமாட்டின் மீது கிருஷ்ண பிரிஜித் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.

இதில் பசுமாடும், வாலிபரும் தூக்கி வீசப்பட்டனர். வாலிபர் நேராக பசுமாட்டின் கொம்பின் மீது போய் விழுந்தார். அப்போது கொம்பு வாலிபரின் நெஞ்சில் ஆழமாக பாய்ந்து உயிருக்கு போராடி கொண்டி ருந்தார்.

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, விரைந்து வந்து வாலிபரை மீட்டு ஒற்றப்பாலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே விபத்தில் சிக்கிய பசுமாடும் இறந்து போனது. இதுகுறித்து ஒத்தப்பாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com