சங்கராபுரம் அருகே கால்வாயில் தவறி விழுந்து வாலிபர் பலி

சங்கராபுரம் அருகே கால்வாயில் தவறி விழுந்து வாலிபர் பலியானார்.தினேஷினை சங்கராபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சங்கராபுரம் அருகே கால்வாயில் தவறி விழுந்து வாலிபர் பலி
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பாவ ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன் மகன் தினேஷ் (வயது 28). இவர் சம்ப வத்தன்று வீட்டிலிருந்து வெளியே வந்தபோது வீட்டின் முன்புறம் உள்ள கழிவு நீர் கால்வாயில் கால் தவறி விழுந்தார்.

பலத்த காயமடைந்த தினேஷினை சங்கராபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com