குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

போதையில் நிலைதடுமாறி முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்நண்பர் வீட்டுக்கு சென்றனர்.
குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
Published on

கோவை,

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் நித்யானந்தா நாயக் (வயது 30). இவர் திருப்பூரில் தனது உறவினர் திலிப்குமார் நாயக்(34) என்பவருடன் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக இருவரும் கோவை வந்தனர். பின்னர் அவர்கள் நண்பருடன் சேர்ந்து கோவையில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது குடித்துவிட்டு மைலம்பட்டி கருப்பராயன்பாளையத்தில் உள்ள அவர்களது நண்பர் வீட்டுக்கு சென்றனர். அங்கு முதல் மாடியில் நித்யானந்தா நாயக் செல்போனில் யாருடனோ நீண்ட நேரம் பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் போதையில் நிலைதடுமாறி முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.  

X

Maalai Malar
www.maalaimalar.com